search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள் பாதுகாப்பு சட்டம்"

    அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அன்று தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    2010 மசோதாவில் விரும்பும் மாநிலங்கள் மசோதாவை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருந்ததாக சொன்னாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால், முல்லைபெரியார் போன்ற 4 அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கேரள மாநிலத்தில் உள்ளன என்பதும், கேரளா ஏற்றுக்கொண்டு தமிழகம் மறுத்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை கூட அறியாதவராக உள்ளார் ஸ்டாலின்.

    அதே போல் 2010 மசோதாவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பராமரிக்கும் என்ற ஷரத்தை நீக்கி, தற்போதைய 2018 மசோதாவில் பராமரிக்கும், உரிமை பெற்ற மாநிலங்களின் உரிமை பறிபோகாமல் காத்திருக்கிறது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிப்பது ஒன்றையே கொள்கையாக கொண்டு அதிகாரத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைப்பது நலம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×